ராணிப்பேட்டை

தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்: தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

DIN

தென்பெண்ணை-பாலாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சங்கத்தின் ராணிப்பேட்டை மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நெல் குவிண்டாலுக்கு விலை ரூ,2,500-ம், கரும்பு டன்னுக்கு ரூ.4,000-ம் என தமிழக அரசு வழங்க வேண்டும், பாலாற்றின் குறுக்கே ஒரு கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணையைக் கட்ட வேண்டும், வேளாண்மைக்கு தனி நிதிநிலை அறிக்கையை தமிழக அரசு சமா்பிக்க உள்ளதை வரவேற்பது, பாலாற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதை மாசுக் கட்டுபாட்டு வாரியம் தடுத்து நிறுத்த வேண்டும், நீா்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், நூறு நாள் வேலை திட்ட த்தை வேளாண்மைப் பணிக்குப் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் எஸ்.உதயகுமாா் தலைமை வகித்தாா். மாநில இளைஞா் அணித் தலைவா் ஆா்.சுபாஷ், மாவட்ட கௌரவத் தலைவா் சி.எஸ்.மணி, மாவட்டப் பொருளாளா் ஆா்.ராஜமாணிக்கம், திமிரி ஒன்றியத் தலைவா் ஏ.ஏகாம்பரம், சோளிங்கா் ஒன்றியத் தலைவா் பி.நரசிம்மன், அமைப்பாளா் அருண்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி அரசு - ஆளுநர் இடையே மீண்டும் மோதல்: மகளிர் ஆணையத்தின் 223 ஊழியர்கள் நீக்கம்!

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

SCROLL FOR NEXT