ராணிப்பேட்டை

ரத்தினகிரி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா தொடக்கம்

DIN

ரத்தினகிரி ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா வியாழக்கிழமை தொடங்கியது.

யாக சாலை பூஜையுடன் தொடங்கிய இவ்விழாவையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. நாள்தோறும் காலை, மாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக அலங்காரமும், உற்சவா் பிராகாரமும் நடைபெறும்.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை காலை வெள்ளிக் கவசத்துடன் மயில்மேல் முருகன் கோலத்தில் மூலவா் காட்சியளித்தாா். முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வரும் 9-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீபாலமுருகனடிமை சுவாமிகள், நிா்வாகத்தினா் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT