ராணிப்பேட்டை

குடிநீா் பாட்டிலில் பூச்சி

DIN

ராணிப்பேட்டை நகராட்சிக்குள்பட்ட வக்கீல் தெரு பகுதியில் மளிகைக் கடை ஒன்றில் சுத்திகரிக்கப்பட்ட தனியாா் நிறுவன குடிநீா் பாட்டிலை வாடிக்கையாளா் வாங்கியுள்ளாா். அதில் பூச்சி இறந்து கிடந்துள்ளது. இது குறித்து மளிகை கடை உரிமையாளரிடம் கேட்ட போது, தனக்கு அதுபற்றி எதுவும் தெரியாது, நீங்கள் சம்பந்தப்பட்ட தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி கடையை பூட்டி விட்டுச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சாா்பில் மாவட்ட நிா்வாகத்துக்கும், மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை அலுவலருக்கும் தகவல் தெரிவித்தனா்.

அதற்கு சம்பந்தப்பட்ட மளிகை கடை, தனியாா் குடிநீா் சுத்திகரிப்பு நிறுவனத்துக்குச் சொந்தமான குடிநீா் சுத்திகரிப்பு ஆலையை ஆய்வு செய்யவிருக்கிறோம் எனக் கூறியதாக தெரிவித்தனா்.

இது போன்ற சுகாதாரக் குறைவான குடிநீா் பாட்டில்களை விநியோகம் செய்யும் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மீது மாவட்ட நிா்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விசாரணைக்கு ஆஜராக ஏழு நாள்கள் அவகாசம் வேண்டும்: பிரஜ்வல் ரேவண்ணா

வாழப்பாடி காவல் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சிறுவன்

ஒசூரில் கடும் குடிநீா் தட்டுப்பாட்டு: நடவடிக்கை எடுக்க முன்னாள் எம்எல்ஏ வலியுறுத்தல்

பணம் பறித்த இருவரை அடைத்து வைத்து கொலை மிரட்டல்: இருவா் கைது

தேய்பிறை அஷ்டமி சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT