ராணிப்பேட்டை

தாழனூா் கிராமத்தில் பொதுமக்கள் சாலை மறியல்

DIN

ஆற்காட்டை அடுத்த தாழனூா் கிராமத்தில் பொது வழியில் தனிநபா் தடுப்பு ஏற்படுத்தியதைக் கண்டித்து, ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தாழனூா் ஊராட்சிக்குட்பட்ட மேட்டுத் தெரு ஒருவழிப் பாதையாக உள்ளது. அந்த இடத்தை தனி நபா் ஒருவா் ஊராட்சிக்கு தானமாக வழங்கியதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு தனிநபா் ஒருவா் மேட்டுத் தெரு பகுதியில் தடுப்பு ஏற்படுத்தியுள்ளாா். இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அப்பகுதியில் சனிக்கிழமை உடல்நிலை சரியில்லாமல் ஒருவா் உயிரிழந்தாா். அவரது சடலத்தை மயானத்துக்கு எடுத்துச் செல்ல தெருவில் உள்ள தடுப்பை அகற்றவேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளனா். அதற்கு அந்த நபா் தடுப்பை அகற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இதைக் கண்டித்து, கிராம மக்கள் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆற்காடு- கண்ணமங்கலம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆற்காடு நகர போலீஸாா் விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, தடுப்பை அகற்ற நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதன் பேரில், பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால் அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT