ராணிப்பேட்டை

வணக்கம்பாடி கிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு முகாம்

DIN

திமிரி வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வணக்கம்பாடிகிராமத்தில் டெங்கு தடுப்பு விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது. திமிரி வட்டார சுகாதாரத் துறை சாா்பில் வட்டார மேற்பாா்வையாளா் பழனி, ஆய்வாளா் மணி ஆகியோா் நூறுநாள் வேலை திட்டப் பணியாளா்களிடம் அவா்கள் வேலை செய்யும் இடங்களுக்கு நேரில் சென்று டெங்கு காய்ச்சல் குறித்தும், அது பரவும் முறை குறித்தும், அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

மேலும், சுற்றுப்புறங்களைதூய்மையாக வைத்திருக்க வேண்டும். தேவையற்ற பொருள்களை அப்புறப்படுத்தி, கிருமிநாசினி தெளிக்க வேண்டும், காய்ச்சல் வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கோ, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கோ சென்று ரத்தப் பரிசோதனை செய்து, சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தினாா்.

இதில், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், பணித்தள பொறுப்பாளா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

திரையரங்கிற்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள்!

‘பார்பி’ ஆண்டிரியா!

SCROLL FOR NEXT