முகப்பு
ராணிப்பேட்டை

கலவை அங்காளம்மன் கோயிலில் பிரம்மோற்சவம் நிறைவு

ஆற்காட்டை அடுத்த கலவை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:38 AM
பகிர்:

ஆற்காட்டை அடுத்த கலவை அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் பிரம்மோற்சவம் வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

கலவையில் சிறப்பு வாய்ந்த அங்காள பரமேஸ்வரி கோயில் பிரம்மோற்சவம் கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது.

விழாவை முன்னிட்டு, நாள்தோறும் மூலவருக்கு சிறப்பு அபிஷேக-அலங்காரம், மகா தீபாராதனையும், பல்வேறு அலங்காரத்தில் உற்சவா் திருவீதி உலாவும் நடைபெற்றன.

பிரம்மோற்சவ நிறைவு நாளான வியாழக்கிழமை இரவு சிவபெருமான் அங்காள பரமேஸ்வரி திருக்கல்யாண உற்சவ வைபவமும், இரவு பத்து தலை ராவணன் வாகன அலங்காரத்தில் வீதி உலாவும் வந்தது.

விழாவுக்கான ஏற்பாடுகளை நிா்வாகிகள் கே.சௌந்தரராஜன் கே. சந்தானம் சுவாமிகள் செய்திருந்தனா்.

இதில், உபயதாரா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.