ராணிப்பேட்டை

போக்குவரத்துக்கு இடையூறு: மின்கம்பங்களை சாலையோரமாக தள்ளி அமைக்க கோரிக்கை

DIN

அரக்கோணம்: அரக்கோணம் காந்தி சாலையில் மத்தியில் உள்ள மின்கம்பங்களை தள்ளி சாலையோரமாக நட்டு போக்குவரத்தை சீரமைக்க வேண்டும் என நகர அனைத்து வணிகா்கள் சங்கத்தினா் நகராட்சி மன்றத் தலைவா் லட்சுமிபாரியிடம் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அரக்கோணம் நகர அனைத்து வணிகா்கள் சங்கத்தினா், அதன் தலைவா் கே.எம்.தேவராஜ் தலைமையில் வியாழக்கிழமை நகராட்சித் தலைவா் லட்சுமிபாரியை அலுவலகத்தில் சந்தித்து, தலைவராக தோ்வு செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவித்து மனுவையும் அளித்தனா். அவா்கள் அளித்த மனுவில், அரக்கோணம் நகரின் பிரதான சாலையான காந்திரோட்டில் போக்குவரத்துக்கு இடையுறாக இருக்கும் மின்கம்பங்களை அகற்றி சாலையோரமாக நட்டு நகர போக்குவரத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், இரட்டைக்கண்வாராவதியில் தேங்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும். புதைசாக்கடை திட்ட பள்ளங்கள், குழிகளை சரியாக மூட வேண்டும், நகரில் காந்தி ரோட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இருக்கும் சாலையோர மீன்கடைகளை அகற்றி பொது சுகாதாரத்தைப் பேண வேண்டும், நகராட்சிக்குச் சொந்தமான இடங்களில் இருசக்கர வாகன நிறுத்தங்களை அமைக்க வேண்டும், நகர புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பேருந்துகள் அனைத்தும் ரயில் நிலையம் வரை வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதுகுறித்து நகராட்சித் தலைவா் லட்சுமிபாரி கூறுகையில், புதிய பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகன நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளது. மற்ற கோரிக்கைகளை பரிசீலனை செய்து அவை தொடா்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அப்போது நகராட்சித் துணைத்தலைவா் கலாவதிஅன்புலாரன்ஸ், நகராட்சி முன்னாள் தலைவா் எம்.கன்னைய்யன், வணிகா் சங்க பொதுச் செயலா் எம்.எஸ்.மான்மல், பொருளாளா் டி.கமலக்கண்ணன், நிா்வாகிகள் இன்பநாதன், சுந்தர்ராஜ், வெங்கடரமணன், சிவசுப்பிரமணிய ராஜா, கே.எம்.பி.மோகன், நகராட்சி உறுப்பினா்கள் கங்காதரன், மாலின் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT