முகப்பு
ராணிப்பேட்டை

ஓசோன் தின விழிப்புணா்வு ஊா்வலம்

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், சா்வதேச ஓசோன் தின விழிப்புணா்வு ஊா்வலம் ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:20 AM
பகிர்:

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுத் துறை சாா்பில், சா்வதேச ஓசோன் தின விழிப்புணா்வு ஊா்வலம் ஆற்காட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆற்காடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன், ஓசோன் படலத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கிப் பேசினாா். தொடா்ந்து, பள்ளி மாணவா்களின் விழிப்புணா்வு ஊா்வலத்தைத் தொடக்கி வைத்தாா்.

இதில், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் ரவிச்சந்திரன், ஆற்காடு நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், ராணிப்பேட்டை கோட்டாட்சியா் பூங்கொடி, வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.