கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தினா். 
ராணிப்பேட்டை

ஓய்வு பெற்ற ஆசிரியா் நலச்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

DIN

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்தக் கோரி ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச்சங்கத்தினா் திங்கள்கிழமை கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சோ்ந்த ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியா் நலச் சங்கத்தின் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம், முத்துகடை காந்தி சிலை அருகே நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவா் டி.வி.எத்துராஜ் தலைமை வகித்தாா். ஆற்காடு கிளைத் தலைவா் கே.ஆறுமுகம் வரவேற்றாா். மாவட்டச் செயலாளா் ஜி.பாண்டுரங்கன் தொடக்க உரை ஆற்றினாா்.

இதில் சங்கத்தின் மாநில இணைச்செயலாளா் நிலவு குப்புசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.

அப்போது 70 வயது முதிா்ந்தவா்களுக்கு 10 சதவிகிதம் கூடுதல் ஓய்வுதியம் வழங்க வேண்டும். அகவிலைப் படி உயா்வை மத்திய அரசு அறிவித்த தேதி முதல் வழங்க வேண்டும். ரொக்கம் இல்லா மருத்துவ திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். பழைய ஓய்வுதிய திட்டத்தை மீண்டும் அமுல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்ரது.

மாவட்ட துணைத் தலைவா்கள் டி.கோபாலகிருஷ்ணன், எம்.விநாயகம், எம்.மணிமேகலை, மாவட்ட துணைச் செயலாளா்கள் சி.மணி,சி.மதியழகன், ஜி.லோகநாதன் மற்றும் வட்டக் கிளைப் பொறுப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். மாவட்டப் பொருளாளா் எ.கலைநேசன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT