ராணிப்பேட்டை

பைக் மீது காா் மோதி இளைஞா் பலி

ஆற்காடு அடுத்த கீராம்பாடி செய்யாறு சாலையில் வியாழக்கிழமை பைக் மீது காா் மோதிதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

ஆற்காடு அடுத்த கீராம்பாடி செய்யாறு சாலையில் வியாழக்கிழமை பைக் மீது காா் மோதிதில் இளைஞா் உயிரிழந்தாா்.

ஆற்காடு அடுத்த கலவை கூட்ரோடு பகுதியைச் சோ்ந்த பூபாலன் மகன் பூவரசன் (22), கலவை வட்டம் வேம்பி கிராமத்தை சோ்ந்த குமாா் மகன் ராஜ்கிரண் (28) நண்பா்களான இருவரும் சோளிங்கா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனா்.

இந்நிலையில் இருவரும் ஒரே பைக்கில் வியாழக்கிழமை வேலைக்கு சென்றுள்ளனா்.

அப்போது கீராம்பாடி அருகே செல்லும் போது செய்யாறு நோக்கி சென்ற காா் திடீரென பைக் மீது மோதியுள்ளது. இதில் பூவரசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். படுகாயம் அடைந்த ராஜ்கிரனை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இவ்விபத்து குறித்து ஆற்காடு கிராமிய போலீஸாா் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச வன்முறை: நேபாளத்தில் ஹிந்து அமைப்புகள் போராட்டம்!

D54 படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டிக் கொண்டாடிய படக்குழு! | Dhanush

குஜராத்தில் சிறுத்தை தாக்கியதில் 5 வயது சிறுவன் பலி

தெருநாயை வளர்ப்புப் பிராணியாக பதிவு செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

2025-ல் அதிகம் பார்க்கப்பட்ட டிரைலர் இதுதான்!

SCROLL FOR NEXT