ரேஷன் அரிசி பறிமுதல்
அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
அரக்கோணம் வழியாக ஆந்திர மாநிலத்துக்கு ரயிலில் கடத்தப்பட இருந்த ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த் துறையினா் பறிமுதல் செய்தனா்.
ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ராணிப்பேட்டை மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியா் நடராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் மின்சார ரயிலில் அரக்கோணத்தில் அவா் சோதனை நடத்தினா்.
அப்போது, அந்த ரயிலில் கேட்பாரற்று 37 பைகளில் இருந்த 1,002 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகளை அரக்கோணத்தில் உள்ள நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அவா் ஒப்படைத்தாா்.