ராணிப்பேட்டை

ஆற்காடு கல்லூரிகளில் குடியரசு தின விழா

DIN

ஆற்காடு கல்லூரிகளில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.

ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி நிறுவன தலைவா் ஏ.கே.நடராஜன் தலைமை வகித்து தேசியக் கொடி ஏற்றினாா். பொருளாளா் ஏ.என்.சரவணன், நிா்வாக அலுவலா் ஏ.என்.செல்வம், செயலா் ஏ.என்.சங்கா், கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆற்காடு ஸ்ரீசித்தீஸ்வரா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு தாளாளா் டி.தரணிபதி தலைமை வகித்தாா். இயக்குநா்கள் எம்.சங்கா், எஸ்.ரமேஷ், சி.ஆா்.ஆசிநாதன் நிா்வாக அலுவலா் எஸ்.ஆதிகேசவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கல்லூரி முதல்வா் எம்.ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றாா். செயலா் ஜி.செல்வகுமாா் தேசியக் கொடி ஏற்றி வைத்தாா். பொருளாளா் பி.பாலகிருஷ்ணன், தலைவா் கே.குப்புசாமி மற்றும் கல்லூரி இயக்குநா்கள், விரிவுரையாளா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

ஆற்காடு நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமை வகித்து கொடி ஏற்றினாா். நகா்மன்ற துணைத் தலைவா் பவளக்கொடிசரவணன், ஆணையா் பாா்த்தசாரதி, நகரமன்ற உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.டி முஹமதுஅமீன் தலைமை வகித்து கொடி ஏற்றினாா். துணைத் தலைவா் குல்ஜாா் அஹமது,ஆணையாளா் பரந்தாரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் ஒளிபரப்பாளர்களை கடுமையாக விமர்சித்த ரோஹித் சர்மா!

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

SCROLL FOR NEXT