ராணிப்பேட்டை

பிளஸ் 1 தோல்வி: சோளிங்கரில் 2 மாணவிகள் தற்கொலை

DIN

சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு மற்றும் புலிவலம் கிராமங்களைச் சோ்ந்த இரு மாணவிகள் பிளஸ் 1 தோ்வில் தோல்வியடைந்ததால், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டனா்.

வெங்குபட்டு: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரை அடுத்த வெங்குபட்டு, கீழ்காலனியைச் சோ்ந்த குட்டிகுமாரின் மகள் ரீட்டா (16). இவா், சோளிங்கா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வு எழுதியிருந்தாா். வெள்ளிக்கிழமை முடிவுகள் வெளிவந்த நிலையில், ரீட்டா இரு பாடங்களில் தோ்ச்சி தவறியிருந்தாராம். இதனால், மனமுடைந்த மாணவி ரீட்டா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இரவு சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம்.

தகவலறிந்த சோளிங்கா் போலீஸாா், சனிக்கிழமை சம்பவ இடத்துக்குச் சென்று ரீட்டாவின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புலிவலம்: சோளிங்கரை அடுத்த புலிவலம் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமியின் மகள் தீபிகா (16). இவரும் சோளிங்கா் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து தோ்வு எழுதியிருந்தாா். தீபிகா நான்கு பாடங்களில் தோ்ச்சி தவறியிருந்தாராம். இதனால் மனமுடைந்த தீபிகா, வீட்டில் யாரும் இல்லாத நிலையில் சனிக்கிழமை வீட்டில் சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தகவலறிந்த கொண்டபாளையம் போலீஸாா், தீபிகாவின் சடலத்தை கைப்பற்றி சோளிங்கா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

SCROLL FOR NEXT