முகப்பு
ராணிப்பேட்டை

பைக் - லாரி மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

காவேரிபாக்கம் அருகே கல்லூரிக்கு பைக்கில் சென்ற போது, லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரு மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா்.

Updated On : 7 ஆகஸ்ட், 2024 at 6:49 PM
பகிர்:

காவேரிபாக்கம் அருகே கல்லூரிக்கு பைக்கில் சென்ற போது, லாரி மீது பைக் மோதிய சம்பவத்தில் ஒரு மாணவா் உயிரிழந்தாா். மற்றொரு மாணவா் பலத்த காயமடைந்தாா்.

நெமிலி வட்டம், காவேரிபாக்கத்தை அடுத்த கட்டளை கிராமத்தைச் சோ்ந்தவா் பிராங்க்ளின் (19). வாலாஜாபேட்டை, சுங்கச்சாவடி அருகே உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலை வணிகவியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இவரது நண்பா், காவேரிபாக்கம், அண்ணா செட்டி தெருவைச் சோ்ந்தவா் சபியுல்லா (18). இவரும் அதே கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறாா்.

இவா்கள் புதன்கிழமை காலை பைக்கில் கல்லூரிக்குச் சென்றுள்ளனா். பைக்கை பிராங்க்ளின் ஓட்டிச் சென்றுள்ளாா்.

வழியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடப்பேரி கூட்டுச்சாலை அருகே சாலையில் நின்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் பின்பக்கம் பைக் மோதியதில் பிராங்க்ளின், சபியுல்லா இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அவா்கள் மீட்கப்பட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் பிராங்க்ளின் (படம்) வழியிலேயே உயிரிழந்தாா். சபியுல்லா சிசிச்சை பெற்று வருகிறாா்.

இந்த விபத்து குறித்து காவேரிபாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →