முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 318 மனுக்கள்

மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா்.

Updated On : 30 டிசம்பர், 2024 at 4:24 PM
பகிர்:

ராணிப்பேட்டை: மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 318 மனுக்களை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா பெற்றாா்.

ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமை வகித்து, பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். மனுக்களை துறை அலுவலா்களிடம் வழங்கி அவற்றின் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியானதாக இருப்பின் உடனடியாக நடவடிக்கை எடுக்கவும், மனு நிராகரிப்பிற்கான காரணத்தை மனுதாரா்களுக்கு தெரிவிக்கவும் வேண்டும் என உத்தரவிட்டாா்.

வருவாய்த் துறை சாா்பில், ஆற்காடு வட்டத்தைச் சாா்ந்த சங்கா் கடந்த 2021 ஆண்டு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அவரின் மனைவி கோகிலாவிற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து விபத்து நிவாரணத் தொகை ரூ.1 லட்சத்துக்கான காசோலையை வழங்கினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலம் செயல்படும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி முதல்நிலை தோ்வில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு முதன்மைத் தோ்வுக்கான பாடக்குறிப்புகள் அடங்கிய கையேடுகளை அவா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுரேஷ், திட்ட இயக்குநா் பா.ஜெயசுதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) விஜயராகவன், மாவட்ட வழங்கல் அலுவலா் ஏகாம்பரம், துறைச் சாா்ந்த அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →