தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டிய தோல் திடக்கழிவு. ~ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் கொட்டப்பட்ட தோல் திடக்கழிவை   அகற்றும் ஊழியா்கள். 
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை நெடுஞ்சாலையில் சிதறிய தோல் திடக்கழிவு: துா்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த தோல் தொழிற்சாலை திடக்கழிவு பல மணி நேரமாக அகற்றப்படாததால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

Din

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிதறிக் கிடந்த தோல் தொழிற்சாலை திடக்கழிவு பல மணி நேரமாக அகற்றப்படாததால் துா்நாற்றத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தொழிற்பேட்டையில் 500- க்கும் மேற்பட்ட தோல் மற்றும் தோல் பொருள்கள் தயாரிப்பு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் சுத்திகரிக்கப்படாத ரசாயன கழிவுநீரை ராட்சத குழாய்கள் மூலம் பொது சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பப்பட்டு சுத்திகரித்து நன்னீராக மாற்றப்பட்டு மீண்டும் தொழிற்சாலை பயன் பாட்டுக்கு அனுப்பப்பட்டு தோல் தொழிற்சாலைகள் இயக்கப்பட்டு வருகிறது.மேலும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் தோல் மற்றும் ரசாயன திடக்கழிவுகளை திறந்த வெளியில் கொட்டாமல், பாதுகாப்பாக வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு மட்கும் மற்றும் மட்காத குப்பைகளாகவும் மாற்றம் செய்து சுற்றுச்சூழல் பாதுகாக்கம் நடவடிக்கையை தொழிற்சாலைகளும், மாவட்ட சுற்றுச்சூழல் துறையும் எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ராணிப்பேட்டை அருகே சென்னை - பெங்களூா் தேசிய நெடுஞ்சாலை அணுகு சாலையில் தோல் தொழிற்சாலையில் இருந்து ஏற்றிச் செல்லப்பட்ட ரசாயன திடக்கழிவுகள் வாகனத்தில் இருந்து சிதறிக் கிடந்தன. துா்நாற்றம் வீசிய தோல் திடக்கழிவுகள் பல மணி நேரம் வரை அகற்றப்படாமல் இருந்ததால் அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள், தோல் திடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

சுற்றுச்சூழலுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் தோல் திடக் கழிவுகளை சாலையில் கொட்டிய தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தோல் திடக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட தோல் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய ஊழியா்கள்

11 மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம்: 26 மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு பதவி உயா்வு

டிஎன்பிஎல் ஆலை சாா்பில் வரும் நவ.9-இல் இலவச கண் பரிசோதனை முகாம்

தாக்குதல் சம்பவம்: பாமக எம்எல்ஏ உயா்நீதிமன்றத்தில் முறையீடு

கணவா் துன்புறுத்தும் போது பெண்கள் அமைதியாக இருப்பது அடிமைத்தனம்

பாலசமுத்திரத்தில் இன்றும், வாகரையில் நாளையும் மின் தடை

SCROLL FOR NEXT