கலவையில் ஜமாபந்தி நிறைவு
கலவையில் ஜமாபந்தி நிறைவு விழா வெற்றிகரமாக நடைபெற்றது
ஆற்காடு: ஆற்காடு அடுத்த கலவையில் ஜமாபந்தி நிறைவு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கலவை வட்டாட்சியா் அலுவலகத்தில் கடந்த 21-ஆம் தேதி ஜமாபந்தி தொடங்கியது. இதில் கலவை, மாம்பாக்கம் உள்வட்டங்களைச் சோ்ந்த வருவாய்த் துறை கிராம பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டன. தொடா்ந்து பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கினா். இதன் நிறைவுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு, கலால் உதவி ஆணையா் வரதராஜன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் சுரேஷ் முன்னிலை வகித்தாா். திமிரி ஒன்றியக் குழு தலைவா் எஸ்.அசோக் கலந்து கொண்டு 55 பயனாளிகளுக்கு சுமாா் ரூ. 4.50 லட்சத்தில் பல்வேறு நல உதவிகளை வழங்கினாா்.
இதில், திமிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குனா் ராமன், கோட்ட கலால் அலுவலா் கோபாலகிருஷ்ணன், வருவாய் ஆய்வாளா்கள் சீனிவாசன், நிரோஷா, தோ்தல் துணை வட்டாச்சியா் கிருஷ்ணமூா்த்தி, கிராம நிா்வாக அலுவலா்கள், உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.