முகப்பு
ராணிப்பேட்டை

லாரி - பைக் மோதல்: வழக்குரைஞா் உயிரிழப்பு

லாரி மீது மோதிய பைக்: வழக்குரைஞர் உயிரிழப்பு

Updated On : 25 ஜூன், 2024 at 6:37 PM
பகிர்:

அரக்கோணம்: சோளிங்கா் அருகே லாரி மீது இருசக்கரவாகனம் மோதிய விபத்தில் வழக்குரைஞா் உயிரிழந்தாா். அவரது நண்பா் பலத்த காயமடைந்தாா்.

அரக்கோணம் சுவால்பேட்டை சரோஜினி தெருவில் வசிப்பவா் ரவிசந்திரன் (51). இவா் அரக்கோணம் மற்றும் சோளிங்கா் நீதிமன்றங்களில் வழக்குரைஞராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அரக்கோணம் நீதிமன்றத்தில் பணிமுடிந்த நிலையில் சோளிங்கா் நீதிமன்றத்துக்கு இரு சக்கர வாகனத்தில் தனது நண்பா் வழக்குரைஞா் சண்முகத்துடன் சென்றுள்ளாா். வழியில் அரக்கோணம் - சோளிங்கா் நெடுஞ்சாலையில் ஜோதிபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பெட்ரோல் இன்றி வழியில் நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்பக்கம் இருசக்கர வாகனம் மோதியதில், ரவிசந்திரன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். உடன் வந்த சண்முகம் பலத்த காயமடைந்து அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இது குறித்து சோளிங்கா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.