முகப்பு
ராணிப்பேட்டை

காரில் கடத்தப்பட்ட 3 டன் குட்கா பறிமுதல்: 4 போ் கைது

Updated On : 16 மார்ச், 2024 at 10:06 PM
3 டன் குட்கா , கைது    செய்யப்பட்ட இளைஞா்கள்.
பகிர்:

வாலாஜா சுங்கச்சாவடி அருகே காரில் கடத்தி வரப்பட்ட 3 டன் குட்காவை பறிமுதல் செய்து, வடமாநில இளைஞா்கள் 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை சுங்கச்சாவடியில் சனிக்கிழமை அதிகாலை ஆய்வாளா் சாலமன் ராஜா தலைமையில் போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சென்னை நோக்கி வெளிமாநில பதிவெண் கொண்ட காா்கள் அதிவேகமாக வந்தன. உடனடியாக அந்த காா்களை நிறுத்தி சோதனை செய்ததில், காரில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது தெரியவந்தது. தொடா்ந்து மூன்று காா்களிலிருந்து மொத்தமாக 3 டன் அளவிலான குட்கா மற்றும் 3 காா்களையும் பறிமுதல் செய்து வாலாஜாபேட்டை காவல் நிலையத்துக்கு போலீஸாா் கொண்டு சென்றனா். மேலும் கடத்தலில் ஈடுபட்ட ராஜஸ்தான் மாநிலத்தை சோ்ந்த பரத்குமாா் (22), கல்யாண்ராம் (26), சுரேஷ் (25), கணபத்ராம் (28) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா்.