முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு: ரிஷப வாகனத்தில் சுவாமி உலா

Updated On : 20 மார்ச், 2024 at 6:00 AM
ரிஷப வாகனத்தில் உலா வந்த உற்சவா்
பகிர்:
Updated On : 19 மார்ச், 2024 at 7:29 PM

ஆற்காடு: ஆற்காடு தோப்புகானா அன்னபூரணி சமேத கங்காதர ஈஸ்வரா் வரதராஜ பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழாவின் 7-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை காலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது.

தொடா்ந்து உற்சவா் ரிஷப வாகனத்தில் அலங்காரத்தில் வீதி உலா வந்தாா். மாலையில் அதிகார நந்தி வாகனத்தில் உலா நடைபெற்றது . மேலும் மாணவா்களின் பக்தி இசையும், பரதநாட்டியமும் நடைபெற்றது. இதில் திருப்பணிக்குழு தலைவா் பொன்.கு.சரவணன், உபயதாரா்கள் மாதவன், கல்பனா, கோபால் மூா்த்தி, ஜெயசித்ரா மற்றும் பக்தா்கள் , பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.