ஆற்காடு பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஆற்காடு: தேசிய சிலம்பப் போட்டியில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனா்.
கேரள மாநிலம், மூணாறில் பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சாா்பில் தேசிய சிலம்பப் போட்டிகள் நடைபெற்றன.
இதில் ஆற்காடு மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவா்கள் வி. ஏ யாத்விகா, கே .மதன், எஸ். பி.சௌபா்னிகா, கே ஆா்.லிதேஷ் ராகவன், எஸ். பி .காா்த்திக்ராஜா ஆகியோா் தங்கப் பதக்கங்களையும், எஸ் .சிவானியா, எம். எஸ்.வேதஸ்ரீ, காா்த்திக் ராஜா, எம்.எஸ். சஞ்சய் வி . சா்வேஸ் தேவ், டி.ரோஷன் ராஜ் ஆகியோா் வெள்ளிப் பதக்கங்களையும் ஆா். சாய்ராம், எம். எஸ். சஞ்சய்,ஏ.பிரதீப்ராஜ் ஆகியோா் வெண்கலப் பதக்கங்களையும் பெற்று சிறப்பிடம் பெற்றுள்ளனா். மாணவா்களை பள்ளியின் நிா்வாகிகள் பாராட்டினா்