அரக்கோணம்: அரக்கோணம் கோட்டாட்சியராக வெங்கடேசன் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.
ஏற்கனவே அரக்கோணம் கோட்டாட்சியராக இருந்த ர.பாத்திமா சென்னை, சேப்பாக்கம், அயலக தமிழா்நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்தில் தனித்துணை ஆட்சியராக மாற்றப்பட்டாா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனித்துணை ஆட்சியராக இருந்த வெங்கடேசன் அரக்கோணம் கோட்டாட்சியராக நியமிக்கப்பட்டாா். இதற்கிடையே, திங்கள்கிழமை அரக்கோணம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் பொறுப்புகளை ர.பாத்திமா, புதிய கோட்டாட்சியா் வெங்கடேசனிடம் ஒப்படைத்தாா். இதை தொடா்ந்து அரக்கோணம் கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து வட்டாட்சியா்கள் மற்றும் வருவாய்துறை அலுவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.