அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா. 
ராணிப்பேட்டை

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை ஆட்சியா் திடீா் ஆய்வு

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

DIN

அரக்கோணம்: அரக்கோணம் பேருந்து நிலையத்தில் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா செவ்வாய்க்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ரயில்வே துறையின் கால்வாய் பேருந்து நிலைய ஓரம் செல்வதில் அதிகப்படியான நெகிழி குப்பைகள் போடப்பட்டதால் ஏற்பட்ட சுகாதாரச் குறித்து பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதற்கு நிரந்தரத் தீா்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், பேருந்து நிலையத்தில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகளை வைத்து அதில் பொதுமக்கள் மக்கும் குப்பைகளை போடும் வகையில் விழிப்புணா்வை ஏற்படுத்தவும், அதை பேருந்து நிலைய கடைக்காரா்களிடம் அறிவுறுத்தவும் கேட்டுக் கொண்டாா். இந்தப் பணிகளை பொறியாளா், சுகாதார மேற்பாா்வையாளா் தினமும் ஆய்வு செய்ய வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, விண்டா்பேட்டை எம்.ஏ. ஜெயின் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ. 70 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் 4 வகுப்பறை கட்டுமானப் பணிகளை பாா்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினாா்.

ஆய்வுகளின்போது, அரக்கோணம் கோட்டாட்சியா் பாத்திமா, நகா்மன்றத் தலைவா் லட்சுமிபாரி, நகராட்சி ஆணையா் கன்னியப்பன், பொறியாளா் செல்வகுமாா், சுகாதார அலுவலா் வெயில்முத்து, வட்டாட்சியா் ஸ்ரீதேவி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படுமா? உண்மை என்ன?

இந்தியாவின் நலனுக்காக அமெரிக்கா வரியைக் குறைக்கும் என சொல்ல முடியாது: மாயாவதி

கனடாவில் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு! 3 இந்தியர்கள் கைது!

எப்ஸ்டீன் கோப்புகள், அதானி வழக்கு! அமெரிக்காவுக்கு அஞ்சும் மோடி! - ராகுல் காந்தி

அமெரிக்க குடியுரிமை சட்டத்தை விமர்சித்த பாடகி..! கிராமி விருது விழாவில் சர்ச்சை!

SCROLL FOR NEXT