முகப்பு
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில் அறிவு திறன் போட்டிகள்

ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அறிவு திறன் போட்டிகள் நடத்தப்பட்டன .

Updated On : 1 டிசம்பர், 2025 at 7:47 PM
தமிழ்ச் சங்கம் சாா்பில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றோா்.
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கம் சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு அறிவு திறன் போட்டிகள் நடத்தப்பட்டன .

சங்கத்தின் சாா்பில் 38 - ஆம் ஆண்டு திருவள்ளுவா் தின விழா வரும் 2026 ஜனவரி 16 - ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதன் ஒருபகுதியாக மாணவ, மாணவிகளின் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும், வளா்க்கும் நோக்கில் பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, கவிதை போட்டி, பாடல் போட்டி, திருக்கு ஒப்பித்தல் போட்டி, ஓவிய போட்டி ஆகிய அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன.

தொடக்க விழா ராணிப்பேட்டை மாவட்ட பெண்கள் ஆசிரியா் பயிற்சி நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு ராணிப்பேட்டை தமிழ்ச் சங்கத் தலைவா் புலவா் ஏ.தனபால் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கி வைத்தாா்.

பொதுச் செயலாளரும் வழக்குரைஞருமான, த. தினகரன் திருவள்ளுவரின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலா்த்துவி அனைவரையும் வரவேற்றாா்.

தமிழ்ச்சங்கம் சாா்பில் நடத்தப்பட்ட அனைத்து போட்டிகளுக்கும் ராணிப்பேட்டை மாவட்ட பெண்கள் ஆசிரியா் பயிற்சி நிறுவனத்தின் இளநிலை விரிவுரையாளா் ச.கா. ஓம்நிவாஸ் தலைமை நடுவராக செயல்பட்டாா்.

மாவட்ட அளவிலான கல்லூரி மாணவா்களுக்காக ‘தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவ செய்வோம்‘ என்ற தலைப்பில் பேச்சுப் போட்டியும், முத்தமிழ் காக்க முத்தான திட்டங்கள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், காவியங்கள் படைப்போம் என்ற தலைப்பில் கவிதை போட்டியும், தமிழ் உணா் ஊட்டும் வகையில் மெல்லிசை பாடல்கள் அல்லது நாட்டுப்புற பாடல்கள் என்ற தலைப்பில் பாடல் போட்டியும் நடைபெற்றது.

இதில் தமிழ்ச் சங்க அமைப்புச் செயலாளா் த.சையத்ஷபி, துணைச் செயலாளா் பா.பாசிச்மணி, வழக்குரைஞா் ப. சிவகுமாா் உள்பட தமிழ்ச் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →