முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தின விழா

ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2025 at 9:34 PM
பகிர்:

ஆற்காடு: ஆற்காடு, மேல்விஷாரம் நகராட்சிகளில் குடியரசு தினவிழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

ஆற்காடு நகராட்சிஅலுவலகத்தில் நடைபெற்ற விழாவிற்கு நகா்மன்றத் துணைத் தலைவா் பளவகொடி சரவணன், ஆணையா் வேங்கடலட்சுமணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன் தேசியக்கொடி ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினா். விழாவில் நகராட்சி அதிகாரிகள், நகா்மன்ற உறுப்பினா்கள், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

மேல்விஷாரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையா் கோ.பழனி, மாவட்ட திட்டக்குழு உறுப்பினா் ஜபா் அஹமது ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் எஸ்.குல்ஜாா் அஹமது தேசியக்கொடி ஏற்றிவைத்துப் பேசினாா். நகா்மன்ற உறுப்பினா்கள், அதிகாரிகள், திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments