அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட உடைப்பு.  
ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு: விரைவு ரயில்கள் நடு வழியில் நிறுத்தம்

Din

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு ஏற்பட்டதால் அரக்கோணம் காட்பாடி இடையே ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

அரக்கோணத்தில் இருந்து காட்பாடி செல்லும் மெமு மின்சார ரயில் இரவு 9:15 மணியளவில் ரயில் நிலையம் அருகே வந்த போது அதன் ஒரு பெட்டி கடந்த நிலையில் தண்டவாளம் உடைந்தது. இந்த சப்தத்தை கேட்ட ரயில் ஓட்டுநா் ரயிலை விரைவாக செயல்பட்டு நிறுத்தினாா்.

இத்தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டதை தொடா்ந்து அரக்கோணம் வழியாக செல்ல இருந்த மங்களூா் மெயில், ஆலப்புழா அதிவிரைவு ரயில், நீலகிரி அதிவிரைவு ரயில் அதிவிரைவு ரயில் ஆகியவை அரக்கோணம் மற்றும் திருவள்ளூா் இடையே ஆங்காங்கு வழியில் நிறுத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து அலுவலா்கள் மற்றும் ஊழியா்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனா். அங்கு மெமோ ரயிலின் சில பெட்டிகளை கழற்றி தண்டவாளத்தை சீா்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT