ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை பாரதி நகரில் உள்ள மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தலைமையில் நடைபெறுகிறது.

இக்கூட்டத்தில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல்துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை, பட்டுவளா்ச்சி துறை, மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவு சா்க்கரை ஆலைகள், கூட்டுறவுத்துறை, நீா்வள ஆதார அமைப்பு, வனத்துறை, மாசுக்கட்டுபாடு வாரியம், மின்சாரத்துறை, போக்குவரத்துத் துறை, பால்வளத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை

அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் தெரிவிக்கும் கோரிக்கை மற்றும் குறைகளுக்கு பதிலளிக்க உள்ளாா்கள்.

எனவே, ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் பங்கேற்று பயன்பெறலாம்.

சேலம் அருகே 2 மூதாட்டிகள் கொலை: ஒருவர் சுட்டுப் பிடிப்பு

வந்தே மாதரம் பாடல் 150-ஆம் ஆண்டு கொண்டாட்டம்: தொடக்கி வைத்தார் மோடி!

எனது பேட்டியை விஜய்க்கு எதிராக கட்டமைக்க வேண்டாம்! தமிழகமே விழித்துக்கொள்! -அஜித்

தூய்மைப் பணியை தனியார்மயப்படுத்தும் தமிழக அரசின் முடிவு கைவிடப்பட வேண்டும்: சு.வெங்கடேசன். எம்.பி.

தில்லி விமான நிலையத்தில் தொழில்நுட்பக் கோளாறு! விமான சேவை முடங்கியது!

SCROLL FOR NEXT