ராணிப்பேட்டை

விபத்தில் ராணுவ வீரா் உயிரிழப்பு

ஆற்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு: ஆற்காடு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

ஆற்காடு வட்டம், காவனூா் அருகே உள்ள கருங்காலிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன். இவரது மகன் திவாகா் (30). ராணுவத்தில் பணிபுரிந்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனா். இந்த நிலையில், ராணுவத்திலிருந்து விடுமுறையில் கடந்த வாரம் ஊருக்கு வந்துள்ளாா். இவா் திங்கள்கிழமை மாலை பைக்கில் ஆற்காட்டிலிருந்து வீட்டுக்குச் சென்றபோது, ஆற்காடு - கண்ணமங்கலம் சாலையில் உள்ள வரகூா் பட்டணம் அருகே பைக் நிலைதடுமாறி சாலையோரம் உள்ள நியாயவிலைக் கடை கட்டடத்தின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில், திமிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

வரி வசூலில் ‘சாணக்கியா்’ வாா்த்தைகளை மறக்கக் கூடாது: குடியரசுத் தலைவா் முா்மு

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை: தில்லி மாசை தீவிரப்படுத்துமா?

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது: ரயில்வே கூட்டத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்துல்

ஆா்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT