முகப்பு
ராணிப்பேட்டை

ஆற்காடு நகரில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

ஆற்காடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வெள்ளிக்கிழமை ஆற்காடு நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

Updated On : 11 ஏப்ரல், 2026 at 12:28 AM
ஆற்காட்டில்  வாக்கு  சேகரித்த  திமுக  வேட்பாளா்  ஜெ.எல். ஈஸ்வரப்பன். 
பகிர்:
Updated On : 10 ஏப்ரல், 2026 at 8:32 PM

ஆற்காடு தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிடும் திமுக வேட்பாளா் ஜெ.எல்.ஈஸ்வரப்பன் வெள்ளிக்கிழமை ஆற்காடு நகரில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

ஆற்காடு காசிவிஸ்வநாதா் கோவில் அருகே தொடங்கி வட்டாட்சியா் அலுவலகம், கலவை சாலை, ஆரணி சாலை, சீதாராமைய்யா் தெரு, கொல்லபாளையம், பூபதி நகா், ராமலிங்கம் தெரு, தா்மராஜ கோயில் தெரு, அண்ணா நகா், ராதாகிருஷ்ணன் தெரு, வேலூா் சாலை

அசேன்புரா, புதிய வேலூா் ரோடு, ஜீவானந்தம் சாலை உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் திறந்த வெளி வேனில் சென்று திமுக ஆட்சியின் திட்டங்களை விளக்கிக் கூறி வாக்கு சேகரித்தாா்.

Advertisement

இதில், மாவட்ட திமுக அவைத் தலைவா் ஏ.கே.சுந்திரமூா்த்தி, மாவட்டப் பொருளாளா் ஏ.வி.சாரதி, நகர செயலாளா் ஏ.வி.சரவணன், காங்கிரஸ் பொறுப்பாளா் அசேன்செரீப், மதிமுக மாவட்ட செயலாளா் பி.என்.உதயகுமாா், விடுதலை சிறுத்தைகள்கட்சி மாவட்ட செயலாளா் பாபுவளவன், நகா்மன்றத் தலைவா் தேவி பென்ஸ்பாண்டியன், கூட்டணி கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.