அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி
அரக்கோணம்(தனி) தொகுதியில் மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா்.
அரக்கோணம்(தனி) தொகுதியில் மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குசாவடி மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் அங்கு பணிபுரியும் அலுவலா்கள் அனைவரும் பெண் அலுவலா்களாக இருக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அரக்கோணம் தொகுதியில் ஜோதிநகரில் உள்ள பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
பிங்க் நிற வாக்குச்சாவடியை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா். வாக்குசாவடி அலுவலா், வாக்குபதிவு அலுவலா்கள் இடையே பிங்க் நிறம் குறித்து மகளிா் வாக்காளா்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி ஆலோசனை தெரிவித்தாா். அப்போது அவருடன் அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ், உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன், அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
Advertisement