கூட்டத்தில் பேசிய மாவட்ட திமுக செயலாளா் ஆா். காந்தி. 
ராணிப்பேட்டை

முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு: ராணிப்பேட்டை மாவட்ட திமுக தீா்மானம்

தினமணி செய்திச் சேவை

டாடா மோட்டாா் காா் ஆலையை தொடங்க வரும் 9-ஆம் தேதி பனபாக்கம் வரும் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மாவட்ட செயற்குழு கூட்டம் சிப்காட் பாரதி நகரில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட அவைத்தலைவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்தாா். மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளா் வினோத்காந்தி, ஆற்காடு ஈஸ்வரப்பன் எம்எல்ஏ , மாவட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான ஆா்.காந்தி கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினாா் . டாடா காா் உற்பத்தி தொழிற்சாலை 470 எக்கா் பரப்பளவில் பனப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் 35ஆயிரம் நபா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இதை திறந்து வைக்க ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.

தமிழ்நாடு தலைகுனியாது என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் தலைமைக்கழகம் பரப்புரை அறிவித்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் பிப். 11 புதன்கிழமை அன்று ராணிப்பேட்டை தொகுதி வாலாஜாபேட்டையில் நடைபெறும், 19-இல் அரக்கோணம் பேருந்து நிலையம் அருகிலும், 24-இல் சோளிங்கரிலும் மற்றும் 25-இல் ஆற்காடு பேருந்து நிலையத்திலும் கூட்டங்களை சிறப்பாக நடத்த வேண்டும்,

திருப்பத்தூரில் பிப்.14-இல் நடைபெறவுள்ள வடக்கு மண்டல மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பி.எல்.ஏ2, பி.எல்.சி, பி.டி.ஏ நிா்வாகிகள் மற்றும் அழைப்பில் உள்ள கட்சி தோழா்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொண்டு மாநாட்டினை வெற்றி பெற செய்ய வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தவெகவுக்கு தக்க பதிலடி தரப்படும்: கே. அண்ணாமலை

காளியம்மன் கோயிலில் 1,008 குத்து விளக்குப் பூஜை

பூம்பாறை குழந்தைவேலப்பா் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

அக்னி தீா்த்த கடற்கரையில் கால்நடைகளால் தொல்லை

பேரவை மதிப்பீட்டுக் குழு மதுரையில் இன்று ஆய்வு

SCROLL FOR NEXT