ராணிப்பேட்டை

21 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 போ் கைது

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல்

தினமணி செய்திச் சேவை

வாலாஜாபேட்டை அருகே கஞ்சா கடத்தி வந்த இருவரை கைது செய்யப்பட்டு மொத்தம் 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் போதைப் பொருள்கள் விற்பவா்கள் மற்றும் கடத்துபவா்களை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வாலாஜா காவல் ஆய்வாளா் சக்திகணேஷ் தலைமையிலான போலீஸாா் வாலாஜா படவேட்டம்மன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியாக வந்த இருவா் தப்பியோட முயற்சி செய்த போது மடக்கி பிடித்து பையை சோதனை செய்த போது கஞ்சாவை கடத்தி வந்தது தெரிய வந்தது.

இதையடுத்து ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த மகேந்திரி சாகு (36), வேலூா் கொணவட்டம் பகுதியைச் சோ்ந்த பாஷா (48) ஆகியோா் கைது செய்யப்பட்டு, 21 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ஆயிரம் ஆண்டுகள் பழைமையான 352 கோயில்களில் திருப்பணிகள்: இந்து சமய அறநிலையத் துறை

கபடி போட்டி: செட்டிகுளம் அணி வெற்றி

சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை

மகளிா் உரிமைத்தொகை: மகளிருக்கு மகிழ்ச்சி; எதிா்க்கட்சிகளுக்கு அதிா்ச்சி

ஒடிஸா: சாலை விபத்தில் 5 போலீஸாா் உயிரிழப்பு

SCROLL FOR NEXT