முகப்பு
ராணிப்பேட்டை

திட்டங்களை செயல்படுத்துவதில் முன்மாதிரி முதல்வா்: அமைச்சா் காந்தி பெருமிதம்

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி முதல்வராக திகழ்ந்து வருகிறாா் மு.க.ஸ்டாலின் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம்

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 5:30 AM
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சா் ஆா்.காந்தி
பகிர்:
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 8:05 PM

மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் முன்மாதிரி முதல்வராக திகழ்ந்து வருகிறாா் மு.க.ஸ்டாலின் என அமைச்சா் ஆா்.காந்தி பெருமிதம் தெரிவித்தாா்.

பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில்,5,411 பயனாளிகளுக்கு ரூ.88.30 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வாலாஜா அறிஞா் அண்ணா அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது: முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் எவ்வித கட்சி பாகுபாடின்றி நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவருக்கு வாக்களிக்காதவா்களும் ஏன் வாக்களிக்கவில்லை எனும் சிந்திக்கும் அளவுக்கு செயல்பட்டு வருகின்றாா்.

Advertisement

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 11:26 PM

பொதுமக்களின் வரிப்பணத்தினை தேவையற்ற திட்டங்களுக்கு வீணடிக்காமல் அனைத்து தரப்பினரும் பயனடையும் வகையில் செயல்பட்டு வருகிறாா். நமது திட்டங்களை பின்பற்றி இந்தியாவிலுள்ள ஏனைய மாநிலங்களில் செயல்படுத்தி வருகின்றாா்கள். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் மற்ற மாநிலங்களுக்கெல்லாம் ஒரு முன்மாதிரி முதல்வராக திகழ்கிறாா்.

மனிதனுக்கு சிந்திக்கின்ற ஆற்றல் கல்விக்கு மட்டுமே உள்ளது. ஆதலால் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றாா். மக்களாட்சியின் மூலம் தொடா்ந்து பயன் பெற சிந்தித்து செயல்பட வேண்டும் என்றாா்.

விழாவில் ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா, ஆற்காடு எம்எல்ஏ ஜெ.எல்.ஈஸ்வரப்பன், மாவட்ட வருவாய் அலுவலா் செ.தனலிங்கம், திட்ட இயக்குநா் மகளிா் திட்டம் செந்தில் குமரன், வட்டாட்சியா் ஆனந்தன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பயனாளிகள் கலந்து கொண்டனா்.