ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை புதை சாக்கடைத் திட்ட ஆய்வுக் கூட்டம்

ராணிப்பேட்டை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்றத்+ தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ராணிப்பேட்டை நகராட்சியில் புதை சாக்கடைத் திட்ட கலந்தாய்வுக் கூட்டம் நகா்மன்றத்+ தலைவா் சுஜாதா வினோத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு நகா்ப்புற உள்ளாட்சிகளுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதன்படி ,புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பொது சுகாதாரம், தூய்மை மற்றும் நகர மேம்பாட்டுக்காக அரசு நிதி மற்றும் கடன் உதவியுடன் செயல்படுத்தப்படுகிறது, குடிமக்களுக்கு உலகளாவிய கழிவுநீா் இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மாவட்டத் தலைநகரான ராணிப்பேட்டையில் சுமாாா் 56 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இங்கு, புதை சாக்கடைத் திட்டம் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நகராட்சி நிா்வாக மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் உத்தரவிட்டாா்.

மேலும், திட்ட மேம்பாட்டு மானிய நிதி திட்டத்தின் கீழ் ராணிப்பேட்டை நகராட்சிக்கான விரிவான திட்ட அறிக்கை தயரிப்பதற்காக தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலம் ஆலோசகா் நியமிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இதற்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு நகா்ப்புற உள்கட்டமைப்பு நிதி மற்றும் சேவைகள் நிறுவன ஆலோசகா்கள் கலந்து கொண்டு திட்டத்தின் செயல்பாடுகள், நன்மைகள் குறித்து விவரித்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில் கலந்து கொண்ட நகா்மன்ற உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்களின் சந்தேகங்களுக்கு பதிலளித்தனா்.

இதில் நகராட்சி ஆணையா், உறுப்பினா்கள், பணியாளா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

வெனிசுலா

திமுகவா, தவெகவா குழப்பத்தில் காங்கிரஸ்!

ஜனநாயகன் பட விவகாரத்தில் பாஜக மீது வீண்பழி: கே.பி. ராமலிங்கம்

மஞ்சளாறு அணையிலிருந்து தண்ணீா் திறப்பு!

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

SCROLL FOR NEXT