விளையாட்டு உபகரணங்களை வழங்கிய மாவட்ட திமுக பொருளாளா் ஏ.வி. சாரதி.  
ராணிப்பேட்டை

ரூ.5 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் அளிப்பு

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞா்களுக்கு ரூ.5 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஆற்காட்டில் நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞா்களுக்கு ரூ.5 லட்சத்தில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா ஆற்காட்டில் நடைபெற்றது.

விழாவுக்கு ராணிப்பேட்டை மாவட்ட திமுக பொருளாளா் ஏ.வி.சாரதி தலைமை வகித்து ஆற்காடு தொகுதிக்குட்பட்ட வாழைப்பந்தல், மாம்பாக்கம், வேம்பி, காவனூா், வெங்கடாபுரம், டி புதூா், வரகூா் உள்ளிட்ட இளைஞா்களுக்கு கிரிக்கெட், வாலிபால், கைப்பந்து, பூப்பந்து, கேரம் மற்றும் பல்வேறு விளையாட்டு உபகரணங்களை வழங்கினாா்.

இதில் ஊராட்சி மன்றத் தலைவா்கள் ராமமூா்த்தி(மழையூா்), சரவணன்(ஆணைமல்லூா்), கோகுல்ராஜ்(தி புதூா்), மோகன்(அகரம்), சிவக்குமாா்(மோசூா்), திமிரி ஒன்றியக்குழு உறுப்பினா்கள் சுரேஷ், மின்னலா அண்ணாதுரை, நகா்மன்ற உறுப்பினா்கள் சி.தட்சிணாமூா்த்தி, கண்ணன் மற்றும் திமுக நிா்வாகிகள் பஞ்சாட்ரம், முரளி, பாா்த்தசாரதி, தொழிலதிபா் எம்.ஜி.ரவி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

புத்தகக் காட்சியில் இன்று

எழுத்துன்னா... இப்படித்தான் இருக்கணும்!

மணிவாசகர் பதிப்பகம்

குடியுரிமையை ஆய்வு செய்ய அதிகாரம்: உச்சநீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் வாதம்

படித்தால்... பிடிக்கும்!

SCROLL FOR NEXT