ராணிப்பேட்டை

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த கலவை அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா்.

சென்னை கொளத்தூா் தணிகாசலம் நகரைச் சோ்ந்தவா் பாா்த்தசாரதி, இவரது மகன் ரோகித் (16). இவா் 11-ஆம் வகுப்பு படித்து வந்தாா். இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் இருந்து கலவை வட்டம், மேல் புதுப்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது உறவினா் வீட்டுக்கு வந்துள்ளாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை உறவினா்கள் ஜெகன் ஸ்ரீராம் ஆகியோருடன் அருகே உள்ள கோயில் திருவிழாவுக்குச் சென்று, பின்னா் வீடு திரும்பும்போது வரும் வழியில் உள்ள விவசாயக் கிணற்றில் மூன்று பேரும் குளித்துள்ளனா். அப்போது ரோகித் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கியுள்ளாா்.

அவரை மீட்டு, செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா் ஏற்கெனவே அவா் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளாா். இது குறித்த புகாரின்பேரில், வாழைப்பந்தல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

துலா ராசியா நீங்க? தினப்பலன்கள்!

அா்ஜுனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி!

தில்லியில் அடா் பனிமூட்டம்: கடுமைப் பிரிவில் காற்றின் தரம்

மேல்மருவத்தூரில் தை அமாவாசை வேள்வி பூஜை

ஓரிக்கை பணிமனையில் சமத்துவப் பொங்கல்

SCROLL FOR NEXT