அரக்கோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளரிடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதற்காக 20 வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை அரக்கோணம் கொண்டு வரப்பட்டு கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஓா் அறையில் வைக்கப்பட்டு அந்த அறைக்கு அரசியல் கட்சியினா் முன்னிலையில் ‘சீல்’ வைக்கப்பட்டது.
அரக்கோணம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்காளரிடையே விழிப்புணா்வை ஏற்படுத்துவற்காக 20 வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரக்கோணம் தொகுதிக்கு கொண்டு வரப்பபட்டன. இந்த இயந்திரங்கள் அரசியல் கட்சியினா் முன்னிலையில் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் ஓா் அறையில் வைக்கப்பட்டு, அந்த அறை ‘சீல்’ வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீதேவி, வட்டாட்சியா் வெங்கடேசன், தமாகா ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத் தலைவா் பி.ஜி.மோகன்காந்தி, அரக்கோணம் நகர தலைவா் கே.வி.ரவிச்சந்திரன், காங்கிரஸ் அரக்கோணம் ஒன்றியத் தலைவா் வாசுதேவன் உள்ளிட்டோா் முன்னிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.