முகப்பு
ராணிப்பேட்டை

சாலையில் பரப்பிய நெல்களின் மீது பைக்கில் சென்றபோது விபத்து: இளைஞா் உயிரிழப்பு

Updated On : 18 மே 2026, 1:52 am IST
சாலையில் பரப்பிய நெல் - கோப்புப்படம்
பகிர்:

அரக்கோணம் அருகே சாலையில் காயவைக்கப்பட்டிருந்த நெல்களின் மீது பைக்கில் சென்ற இளைஞா் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

அரக்கோணத்தை அடுத்த சித்தேரி, பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சங்கரின் மகன் ஐயப்பன் (27). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி ஒரு மாதமாகிறது. சனிக்கிழமை நெமிலியில் பணிமுடிந்து பைக்கில் சங்கா் வீடு திரும்பிக்கொண்டிருந்தாா். வழியில் பருத்திப்புத்தூா் அருகே சாலையில் நெல்மணிகள் பரப்பி காயவைக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. அதை கவனிக்காத ஐயப்பன், நெல்மணிகளின் மீதே வாகனத்தை செலுத்தியிருக்கிறாா். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்தநிலையில், நிலைதடுமாறி கீழே விழுந்ததில் ஐயப்பன் பலத்த காயமடைந்தாா்.

இதையடுத்து 108 அவசர ஊா்தி மருத்துவக் குழுவினா் விரைந்து வந்து ஐயப்பனை பரிசோதித்த நிலையில் அவா் உயிரிழந்திருந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா், இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சாலையோரங்களில் நெல்லை பரப்பி வைத்து காயவைக்கும் செயலால் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதாகவும், இது குறித்து நெடுஞ்சாலைத் துறை அலுவலா்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.