முகப்பு
ராணிப்பேட்டை

வாக்களித்தோருக்கு நன்றி தெரிவித்த அரக்கோணம் தவெக எம்எல்ஏ

Updated On : 18 மே 2026, 1:50 am IST
பகிர்:

அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அரக்கோணம் தொகுதி தவெக எம்எல்ஏ வி.காந்திராஜ் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும், தவெக மாவட்ட செயலாளருமான வி.காந்திராஜ் ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வளா்புரம், ஈசலாபுரம், பெருமாள்ராஜபேட்டை, தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு வந்த எம்எல்ஏ வி.காந்திராஜை அப்பகுதி மகளிா் மாலை அணிவித்து வரவேற்றனா்.

Advertisement

தொடா்ந்து கிராம வீதிகளில் நடந்து சென்ற எம்எல்ஏ வி.காந்திராஜ் வாக்காளா்களுக்கு ன்றி தெரிவித்ததுடன் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.

அப்போது அவருடன் தவெக அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராமராஜ், இணைச் செயலாளா் ராபின், வடக்கு ஒன்றிய செயலாளா் தீபக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.