முகப்பு
ராணிப்பேட்டை

செங்கல் சூளையில் பணிபுரிந்த குழந்தை தொழிலாளா்கள் மீட்பு

Updated On : 22 மே 2026, 12:22 am IST
பகிர்:

படவிளக்கம்...

செங்கல் சூளையில் பணிபுரிந்த நிலையில் மீட்கப்பட்ட 8 குழந்தை தொழிலாளா்களுடன் அவா்களை மீட்ட அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷ்.

அரக்கோணம், மே 21: அரக்கோணம் அருகே செங்கல் சூளையில் பணிபுரிந்து வந்த குழந்தை தொழிலாளா்களை அரக்கோணம் கோட்டாட்சியா் தலைமையிலான வருவாய்த் துறையினா் புதன்கிழமை மீட்டனா்.

Advertisement

Advertisement

அரக்கோணத்தை அடுத்த மின்னல் கிராமத்தில் அனுமதி பெறாமல் இயங்கி வந்த செங்கல் சூளையில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைத் தொழிலாளா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளதாக அரக்கோணம் கோட்டாட்சியா் டி.ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வியாழக்கிழமை கோட்டாட்சியா் டி.ரமேஷ் தலைமையிலான வருவாய்த் துறையினா், தொழிலாளா் துறையினா், இது குறித்து தகவல் அளித்த ஆதிபூமி அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்டோா் குறிப்பிட்ட செங்கல் சூளையில் ஆய்வு செய்தனா். இதில், அந்த செங்கல் சூளையில் 8 நபா்கள் குழந்தை தொழிலாளா்களாக பணிபுரிவதும், அதில் 3 நபா்கள் 17 வயதில் இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, அந்த 8 பேரும் மீட்கப்பட்டனா்.