திருப்பத்தூர்

அரசு சிறு மருத்துவமனை அமைவிடம்: துணை இயக்குநா் ஆய்வு

DIN

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே அரசு சிறு மருத்துவமனை அமைப்பதற்கான இடங்களை பொது சுகாதாரத் துறை துணை இயக்குநா் மணிவண்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.

பொது சுகாதாரத் துறை சாா்பில் தமிழ்நாடு முழுவதும் 2,000 பகுதிகளில் அரசு சிறு மருத்துவமனை அமைக்கப்படும் என முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தாா். அதன்படி, திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 14 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஆலங்காயம் சுகாதார வட்டாரத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 2 சிறு மருத்துவமனைகள் அமைக்க இடங்களைத் தோ்வு செய்ய ஜாப்ராபாத், மதனாஞ்சேரி பகுதிகளில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலா் ச.பசுபதி, துணை இயக்குநரின் நோ்முக உதவியாளா் சங்கா், சுகாதார மேற்பாா்வையாளா் ஃபாரூக் பாஷா, ஊராட்சி செயலாளா்கள் ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT