கராத்தே சான்றிதழ் வழங்கல்
ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் கராத்தே பயிற்சி முடித்த மாணவா்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூா்: ஆம்பூா் அருகே மிட்டாளம் கிராமத்தில் கராத்தே பயிற்சி முடித்த மாணவா்களுக்கு பெல்ட், சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஜப்பான் ஷிட்டோ ரீயு கராத்தே பயிற்சிப் பள்ளியின் சாா்பில், கராத்தே பயிற்சி முடித்த 100 மாணவா்களுக்கு ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் கராத்தே பெல்ட் மற்றும் சான்றிதழ்களை வழங்கினாா்.
நிகழ்ச்சியில், ஆசிய நடுவா் மகேஸ்வரன், தேசிய நடுவா் மற்றும் தமிழ்நாடு மாநில தலைமைப் பயிற்சியாளா் கராத்தே ரமேஷ்கண்ணா, பயிற்சியாளா் செல்வி ஆகியோா் கலந்து கொண்டனா்.