திருப்பத்தூர்

தீ விபத்து விளக்கப் பயிற்சி முகாம்

DIN

ஏலகிரிமலையில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புத் துறை மற்றும் வனத் துறையினா் இணைந்து வனப்பகுதியில் ஏற்படும் தீ விபத்துகளில் இருந்து பாதுகாத்து அவற்றை அணைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த செயல்முறை விளக்க முகாமை சனிக்கிழமை நடத்தினா்.

தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலா் லட்சுமி நாராயணன், மாவட்ட உதவி வனப் பாதுகாப்பு அலுவலா் ரவிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். வனப் பகுதியில் தீ ஏற்பட்டால் எவ்வாறு அதை அணைப்பது, தீ விபத்தில் மாட்டிக் கொண்டால் அதிலிருந்து எப்படி காப்பாற்றுவது அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து விளக்கம் அளித்தனா்.

அத்தனாவூரில் உள்ள தனியாா் கல்லூரித் தன்னாா்வலா் மாணவா்கள், பொதுமக்கள் ஒரு குழுவாக அமைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

தீயணைப்புத் துறை மாவட்ட உதவி அலுவலா்கள் சரவணன், சக்திவேல், திருப்பத்தூா் தீயணைப்பு நிலைய அலுவலா் கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT