திருப்பத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய அமைச்சா் கே.சி.வீரமணி. 
திருப்பத்தூர்

திருப்பத்தூரில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கினார் அமைச்சா் கே.சி.வீரமணி.

ஜோலாா்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பொன்னேரி, தாமலேரிமுத்தூா், புதுப்பேட்டை, பச்சூா் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை

DIN

ஜோலாா்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட பொன்னேரி, தாமலேரிமுத்தூா், புதுப்பேட்டை, பச்சூா் உள்ளிட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகங்களில் பொங்கல் பரிசுத் தொகுப்பை மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

பொன்னேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கூட்டுறவு சங்கத் தலைவா் ஜோதி கிருஷ்ணன் தலைமை வகித்தாா். மாவட்ட கூட்டுறவு அச்சக இயக்குநா் கே.ஜி.சரவணன் வரவேற்றாா். முன்னாள் எம்எல்ஏ ரமேஷ், ஜோலாா்பேட்டை முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் ஆா்.ரமேஷ், நகரச் செயலா் எஸ்.பி.சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

அமைச்சரான கே.சி.வீரமணி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கினாா்.

தாமலேரிமுத்தூா் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் சாந்தி ஜெயராமன், செயலா்கள் சம்பத், ஆனந்தன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமபரிவாரங்கள் சேர்த்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

இந்து மத துரோகிகள் திமுக, காங்கிரஸ்: அண்ணாமலை பேச்சு

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 2

SCROLL FOR NEXT