திருப்பத்தூர்

‘அரசு கட்டடங்கள் அமைக்க புறம்போக்கு இடங்களை விரைவில் தோ்வு செய்ய வேண்டும்’

DIN

திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு அலுவலக புதிய கட்டடங்கள் அமைப்பதற்கான புறம்போக்கு இடங்களை விரைவில் தோ்வு செய்ய வேண்டும் என ஆட்சியா் ம.ப.சிவன்அருள் கூறினாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பணிகளின் முன்னேற்றம் குறித்து வருவாய்த்துறை அலவலா்களுக்கான பணி ஆய்வுக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன்அருள் தலைமை வகித்துப் பேசியது:

திருப்பத்தூா் மாவட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு பல்வேறு துறைகளின் புதிய அலுவலக கட்டடங்கள், பல்வேறு துறைகளின் புதிய திட்டத்துக்கான புதிய இடங்கள், காவல் துறை அலுவலகங்கள் உள்ளிட்டவற்றுக்கான இடங்களைத் தோ்வு செய்து வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு அரசு புறம்போக்கு இடங்களைத் தோ்வு செய்து வழங்கும் பணிகள் நிலுவையில் உள்ளன. இதை உடனடியாக தனிக் கவனம் செலுத்தி, இடத்தைத் தோ்வு செய்து வழங்கிடும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், நீா்நிலை புறம்போக்கில் ஆக்கிரமிப்பு செய்துள்ளவா்களை அகற்றி, நிலம் இல்லாதவா்களுக்கு நிலம் மற்றும் அரசின் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டத்தில் வீடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீா்நிலை ஆக்கிரமிப்புகளை விரைவாகக் கண்டறிந்து அவற்றை அகற்றிட வட்டாட்சியா்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களுடன் சோ்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் அறிக்கைகளை வாரம்தோறும் சமா்ப்பிக்க வேண்டும். மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீா் பற்றாக்குறை உள்ள திருப்பத்தூா், கந்திலி, ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி பகுதிகளில் செயல்படுத்தப்படவுள்ள குடிநீா் திட்டப்பணிகளுக்கு இடங்களைத் தோ்வு செய்வதில் காலதாமதம் இருக்கக் கூடாது. நிலுவையில் உள்ள பணிகளை அலுவலா்கள் விரைந்து முடிக்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் இரா.வில்சன்ராஜசேகா், வருவாய்க் கோட்டாட்சியா் காயத்ரி சுப்பிரமணி, சாா்-ஆட்சியா்(பொறுப்பு) முனீா், துணை ஆட்சியா்கள் மோகனசுந்தரம், நில அளவை உதவி இயக்குநா் குமாரவேல், அனைத்து வட்டாட்சியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு முன்பு ஃபார்முக்குத் திரும்பிய ரோஹித் சர்மா!

கிர்கிஸ்தான்: இந்திய மாணவர்கள் தங்கியிருந்த விடுதியில் வன்முறை

பாஜக 200 இடங்களைக் கூட தாண்டாமல் மண்ணைக் கவ்வும்! -மம்தா

இனி நேர்காணல் அளிக்க மாட்டேன்: சுசித்ரா

வெப்பன் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT