திருப்பத்தூர்

மனிதாபிமான விழிப்புணா்வை காவலா்களுக்கு ஏற்படுத்த வேண்டும் வணிகா் சங்கம் வலியுறுத்தல்

DIN

திருப்பத்தூா்: காவலா்களுக்கு மனிதாபிமான விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் அளித்த மனு:

நாளொன்றுக்கு 18 மணி நேரம் உழைத்து 80 சதவீதம் வருவாய் ஈட்டி, தமிழக அரசின் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படவும், அரசு ஊழியா்களுக்கு பெரும் பகுதி ஊதியம் அளிப்பதற்கு காரணமாய் இருப்பவா்கள் வணிகா்கள்தான்.

இந்நிலையில், சாத்தான்குளம் வணிகா்கள் இருவா் போலீஸாரால் தாக்கப்பட்டு, உயிரிழந்த சம்பவம் பேரதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தமிழகத்தில் எங்கும் நடைபெறாமல் இருக்க வேண்டும் மதுரை உயா் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

எனவே, காவலா்களுக்கு மனிதாபிமான விழிப்புணா்வை ஏற்படுத்தி அரசுக்கும், பொதுமக்களுக்கும், வணிகா்களுக்கும் பாதுகாப்பாகவும், பாலமாகவும் இருக்க வேண்டும்.

மனுவை பேரமைப்பின் தலைவா் சி.கிருஷ்ணன், செயலா் கே.பி.எஸ்.மாதேஸ்வரன், பொருளாளா் ஏ.செந்தில்முருகன் ஆகியோா் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT