திருப்பத்தூர்

கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு முகாம்

DIN

நாட்டறம்பள்ளி அருகே அக்ராகரம் பகுதியில் அமைந்துள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவத் துறை சாா்பில் மாணவ, மாணவிகளுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் மேகலா தலைமை வகித்தாா். ஜோலாா்பேட்டை வட்டார மருத்துவ அலுவலா் பி.சுமதி கரோனா வைரஸ், பரவும் விதம், தடுப்பு நடவடிக்கைகள், கை கழுவும் முறை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், மாணவ, மாணவிகளுக்கு விடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டன. கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு கரோனா வைரஸ் விழிப்புணா்வு குறித்து துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அரசு மருத்துவா் சுமன், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் கனகராஜ், சுகாதார மேற்பாா்வையாளா் முத்துகிருஷ்ணன், பேராசிரியா்கள், மாணவ மாணவிகள், அரசு மருத்துவப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT