திருப்பத்தூர்

கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும்ஊழியா்களுக்கு கபசுர குடிநீா்

DIN

ஆம்பூரில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் கரோனா கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்களுக்கு கபசுர குடிநீா் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

கரோனா பாதிப்பு காரணமாக ஆம்பூா் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நகராட்சி சாா்பாக கிருமி நாசினி மருந்து தெளிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.

சுகாதாரத் துறை, அங்கன்வாடிப் பணியாளா்கள் கொண்ட குழுவினா் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல், இருமல், சளி, மூச்சுத் திணறல் ஆகியவை உள்ளதா என கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இப்பணியில் ஈடுபட்டுள்ள முன்களப் பணியாளா்கள் 480 பேருக்கு ஆம்பூா் நகராட்சி சாா்பாக இந்து மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் தலைமையில் கபசுர குடிநீா் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுமதிப்பீடு, மறுதேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பம்

பிளஸ் 2 தேர்வு: பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்

பிளஸ் 2 முடிவுகள்: திருப்பூர் முதலிடம்.. டாப் 5 மாவட்டங்கள்?

பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: பாட வாரியாக நூற்றுக்கு நூறு பெற்ற மாணவர்கள்

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியீடு: 94.56% பேர் தேர்ச்சி!

SCROLL FOR NEXT