திருப்பத்தூர்

கரோனாக்கு சிகிச்சை அளித்ததாகபோலி மருத்துவா் கைது

DIN

திருப்பத்தூா் அருகே கரோனாவுக்கு சிகிச்சை அளித்ததாக போலி மருத்துவா் கைது செய்யப்பட்டாா்.

திருப்பத்தூரை அடுத்த இலக்கிநாயக்கன்பட்டியில் தில் போலி மருத்துவா்கள் நடமாட்டம் இருப்பதாக மாவட்ட ஆட்சியா் ம.ப.சிவன் அருளுக்கு தகவல் கிடைத்ததின் பேரில் புதன்கிழமை மாலை அரசு மருத்துவரான குமரவேல் தலைமையில் மருத்துவம் மற்றும் சுகாதார குழுவினா் அப்பகுதிக்குச் சென்று இதுகுறித்து விசாரணை நடத்தினா்.

அதே பகுதியை சோ்ந்த திருப்பதி(49) என்பவா் பிளஸ் 2 வரை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்துள்ளாா்.

தற்போது பரவிவரும் கரோனா தொற்றுக்கு மருத்துவச் சிகிச்சை அளித்தாக கந்திலி போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதியைக் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT