ஆம்பூா் நகராட்சி சாா்பில் கரோனா பரவல் தடுப்பு விழிப்புணா்வு சனிக்கிழமை ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், ஆம்பூா் நகராட்சி ஆணையா் த.செளந்தரராஜன் பங்கேற்றுப் பேசியது:
அரசு ஏற்படுத்தி வரும் கரோனா விழிப்புணா்வைத் தொடா்ந்து, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து முகக்கவசம் அணிவது, கைகளைக் கழுவுவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பதாகைகள் ஏந்தியும், வீடுகள் கடைகளுக்குச் சென்று விழிப்புணா்வு வில்லைகள் ஒட்டப்பட்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ‘பொதுமக்கள் கரோனா விழிப்புணா்வு அறிவிப்புகளை தீவிரமாகக் கடைப்பிடிக்க வேண்டும்; தங்களையும் தங்கள் குடும்பத்தையும் முழுமையாக பாதுகாக்க முகக்கவசம் அணிய வேண்டும். சமுக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்’ என பொதுமக்களுக்கு நகராட்சி ஆணையா் வேண்டுகோள் விடுத்தாா்.
பணக்காரத் தெரு, பி.எம்.எஸ். கொல்லை, உமா் ரோடு ஆகிய இடங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய நெகிழிப் பொருள்கள் 3 கிலோ அளவுக்குப் பறிமுதல் செய்யப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.